முடிவுக்கு வரும் கொரோனா 2வது அலை... தொற்றிக்கொள்ளும் 3வது அலை அச்சம்!

புதன், 16 ஜூன் 2021 (08:28 IST)
ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வர தொடங்கி உள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்நியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி தொற்று 1000-க்கு கீழ் சரிந்துள்ளது. இதில் பல மாநிலங்களில் பாதிப்பு 500-க்கு கீழ் உள்ளது. கொரோனா பாதிப்பின் விகிதத்தை கடந்த சில மாதங்களோடு ஒப்பிடும் போது தற்போது 85% தொற்று பரவல் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் இறப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி நடுவில் ஆரம்பித்த 2வது அலை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு உச்சத்தை தொட்டு, பின்னர் ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வர தொடங்கி உள்ளது.
 
இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில் 3வது அலை குறித்து எச்சரிக்கையும் விடப்படுத்துள்ளது. கொரோனா 3 ஆம் அலை செப்டம்பர் அல்ல அக்டோபர் மாதத்தில் துவங்க வாய்ப்பிருப்பதாகவும் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்