நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகள் ஆல்மோஸ்ட் டன்... மத்திய அரசு அப்டேட்!

புதன், 16 ஜூன் 2021 (08:42 IST)
நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

 
இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் இரண்டாவது தடுப்பூசியான நோவோவேக்ஸ் 90.4 சதவிகிதம் அளவுக்குப் பலனளிக்கும் என மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது. கொரோனாவின் குறைந்த மற்றும் மிதமான பாதிப்புகளை 100 சதவிகிதம் அளவுக்கு தடுக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் மேரிலேண்டில் இருந்து இயங்கும் நோவாவேக்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் 29,960 பேரிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்தது. இந்நிலையில், இந்தியாவில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
 
மேலும், நோவாவாக்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு  பாராட்டியதுடன், அதன் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்