நாம எந்த மண்ணுல இருக்குறோமோ அந்த மொழிதான் பேசணும்… புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கருத்து!

vinoth
திங்கள், 25 நவம்பர் 2024 (11:14 IST)
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இதையடுத்து சென்னையில் படத்தின் மற்றொரு பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இது புஷ்பா பற்றிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதே மேடையில் பேசிய அல்லு அர்ஜுன் தமிழக மக்களைக் கவரும் விதமாக பேசினார். அதில் “நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழிதான் பேசவேண்டும். அதுதான் அந்த மண்ணுக்கு நாம் செய்யும் மரியாதை. நான் தமிழ்நாட்டுக்கு வந்தால் ‘வணக்கம்’ என்று சொல்வேன். அரபு நாடுகளுக்கு சென்றால் அரபியில் வணக்கம் சொல்வேன். இந்திக்கு சென்றால் ‘நமஸ்தே’ என்பேன். தெலுங்குக்கு வந்தால் ‘பங்காரம்’ என்று சொல்வேன்.” எனப் பேசி ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்