முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு தமிழகத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக விநியோக உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் தமிழல்லாத பிற மொழிப் படங்களில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட படமாக பாகுபலி 2 இருந்தது. தற்போது புஷ்பா 2 அந்த சாதனையை முறியடித்து மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.