விடாமுயற்சி ஷூட்டிங்கில் மீண்டும் ஒரு தடங்கல்…!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:42 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த நான்காம் தேதி முதல் அஜர்பைஜான் என்ற நாட்டில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அங்கு இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் அங்கு இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நிகழ்ந்து வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளதால், அங்கிருந்து வேறு பகுதிக்கு ஷூட்டிங் நடத்த படக்குழு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்