அஜித்தின் விடாமுயற்சியில் மோகன்லால் நடிக்கிறாரா?

திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:34 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் அஜித் பல நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அஜித் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலோடு ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைவைத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் மோகன் லால் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள தொடங்கியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்