அஜித்தை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஸ்டண்ட் சில்வா

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (05:54 IST)
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். பல்கேரியாவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பெரும் பொருட்செலவில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.





இந்த நிலையில் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் இதுவரை இல்லாத அளவில் ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாகவும், அவர் எடுக்கும் ரிஸ்க்கை பார்த்து எனக்கே பயமாக இருப்பதாகவும் ஸ்டண்ட் இயக்குனரும் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமாகிய ஸ்டண்ட் சில்வா தெரிவித்துள்ளார்.

அஜித் இதற்கு முன்னரும் ஆரம்பம், பில்லா 2, ஆகிய படங்களில் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காசு கொடுத்து படம் பார்க்கும் வரும் ரசிகனை ஏமாற்றக்கூடாது, முடிந்தவரை ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதே அஜித்தின் எண்ணமாம்.
அடுத்த கட்டுரையில்