சரத்பாபுவிற்கு இப்படி ஒரு நோய் இருந்ததா? பிரபலம் கூறிய தகவல்!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (19:59 IST)
பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு நேற்று காலமானார். இதனை அடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள சரத்பாபு வீட்டிற்கு இன்று அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்றும் சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு நேற்று காலமானார். 92 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மல்டிபிள் மைலோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22 மே மதியம் 1:30 மணி அளவில் காலமாகியுள்ளார். இதனை நடிகை சுஹாசினி இரங்கல் தெரிவித்து பேட்டி கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்