ஆத்தாடி... பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சனி, 20 மே 2023 (09:16 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகர் ஆன விஜய் ஆண்டனி தற்போது  பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து நேற்று படம் வெளியானது.  நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். 
 
2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் வேற லெவல் படம். ஆனால், இரண்டாம் பாகம் அவ்வளவாக நன்றாக இல்லை. மேலும் இந்த படத்தில் மிகவும் மோசமாக கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 
இப்படம் முதல் நாளில் உலகளவில் 5 முதல் 6 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் 2 முதல் 3 கோடி வசூல் செய்துள்ளது. ஆக இப்படம் கிட்டத்தட்ட ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய வசூல் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்