பிக்பாஸ் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி… நண்பர்களுக்கு அறிவுரை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
நடிகை ஷெரின் இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவருக்கு இப்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.

இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். இவர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்