தோற்றத்தைக் கிண்டல் செய்தவர்களுக்கு ஏமி ஜாக்சன் பதில்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (18:53 IST)
மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.  மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இப்போது எமி ஜாக்சன் மீண்டும் நடிப்பில் ஆர்வமாக இறங்க உள்ளார். அந்த வகையில் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

இதையடுத்து ஒரு ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக அவர் தன்னுடைய உடலை ஒல்லியாக மாற்றி முடி வெட்டி வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் தோற்றத்தைப் பலரும் கேலி செய்தனர்.

இந்நிலையில் இப்போது அதற்கு ஏமி ஜாக்சன் கோபமாக பதிலளித்துள்ளார். அதில் “ ஆண் நடிகர்கள் தங்கள் தோற்றத்தைப் படத்துக்காக மாற்றினால் அதை எல்லோரும் பாராட்டுகள். அதுவே பெண் நடிகை என்றால் மட்டும் ஏன் கேலிகள் எழுகின்றன. பெண் நடிகை அவர்களின் அழகுக்கு வரைமுறையை தாண்டி தோற்றத்தை மாற்றினால் அதை விமர்சிக்க தங்களுக்கு உரிமையுண்டு என நினைக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்