கமல் பட நடிகை வகிதா ரஹ்மானுக்கு தாதா சாஹிப் பால்கே விருது!

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:21 IST)
மத்திய பாஜக அரசு, 2023 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது  நடிகை வகிதா ரஹ்மானுக்கு அறிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில், தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டிற்காகக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தாதா சகேப் பால்கே விருது பெற்ற நடிகர்கள், கே. பாலசந்தர்(2010), செளமித்ரா சாட்டர்ஜி(2011), குல்சார்(2013), ரஜினிகாந்த்(2021),ஆஷா பரோக்(2022), ரேகா(2023) ஆவர்.

இந்த நிலையில்,  மத்திய பாஜக அரசு, 2023 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது  நடிகை வகிதா ரஹ்மானுக்கு அறிவித்துள்ளது.

இவர், விஸ்வரூபம் 2 வது பாகத்தில் கமலின் தாயாராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்