தங்கச்சி அடுத்த விருதுக்கு ரெடியா? – பென்குயின் ட்ரெய்லரை பார்த்து புகழ்ந்த சூரி!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்து அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள பென்குயின் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், காமெடி நடிகர் பரோட்டா சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊரடங்கினால் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது பென்குயின். கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

பென்குயின் ட்ரெய்லரை பார்த்த காமெடி நடிகர் பரோட்டா சூரி ட்விட்டரில் ” தங்கச்சி ட்ரெய்லர் சிறப்பு நடிப்பு அதைவிட சிறப்பு அடுத்த விருதுக்கு ரெடியா இருங்க” என்று தெரிவித்துள்ளார். அதற்கு ”அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்