அறுவை சிகிச்சைக்குப் பின் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரகாஷ் ராஜ்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:10 IST)
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் படப்பிடிப்பின் போது தோள்பட்டையில் காயமடைந்து எலும்பு முறிவிற்கு ஆளானார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பிரகாஷ் ராஜ் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ஜிம்மில் நடிகர் சிரஞ்சீவியோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்