இணையத்தில் பரவும் அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (09:00 IST)
தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் அசோக் செல்வன். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அருண் பாண்டியனின் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனைதான் அசோக் செல்வன் மணக்க உள்ளார். இவர்களின் திருமணம் திருநெல்வேலியில் செப்டம்பர் 13 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை உறுதிபடுத்துவது போல இப்போது அவர்களின் திருமண அழைப்பிதழின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்