போர் தொழில் ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அசோக் செல்வன்..!
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:48 IST)
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த போர் தொழில் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் தமிழக முழுவதும் நல்ல வசூலை எட்டியது என்பதும் 50 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதமே இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்து வருவதால் ஓடிடி ரிலீஸ் செய்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில் போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.