தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமார். இவர். விஜயாகாந்த் ஹீரோவாக நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்துப் பிரபலமானார். அடுத்து புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, ஐயா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்து வந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
இந்த நிலையில், இன்று சரத்குமாரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறந்த நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு சரத்குமார் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.