விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய ஆர்யா!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:12 IST)
நடிகர் விவேக் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளதாக நடிகர் ஆர்யா அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார். 
 
நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விவேக் நடித்த ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு செடிகளை நட்ட ஆர்யா விவேக் அவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளின்போது செடிகள் நடுவேன் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். 
 
நடிகர் விவேக் அவர்கள் செடிகள் நடும் பணியை சிறப்பாக செய்து வந்தார் என்றும் ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மறைந்து விட்டதை அடுத்து அவர் ஆற்றிய பணியை அனைவரும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நான் அவருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளின்போது செடிகள் நடுவேன் என்றும், அதற்கு என்னுடன் இருப்பவர்கள் என்னுடைய நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுக்க உறுதி செய்துள்ளார்கள் என்றும் நடிக்கிறார் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்