சுந்தர்சி,ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுந்தர் சி பேசியபோது நான் சாதாரணமான கலைஞன். என் படத்தை பார்க்க வருபவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்ப வேண்டும் என நினைப்பவன். என்னிடம் புதிய கதையோ, புரட்சிகரமான விஷயங்களோ இல்லை. விமர்சனங்களில் நன்றாக திட்டுங்கள். அது பழகிவிட்டது. ஆனால் கதையை மட்டும் சொல்லாதீர்கள் எனப் பேசியுள்ளார்.