'மெர்சல்' வசூல் எவ்வளவு என்பது தயாரிப்பாளருக்கே தெரியாது! அபிராமி ராமநாதன்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (22:32 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டதாக பெய்டு டுவிட்டர்கள் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் செய்தியை பரப்பி வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்



 
 
'மெர்சல்' படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையாளர் என்ற முறையில் இந்த படத்தின் சென்னை வசூல் எவ்வளவு என்பது எனக்கு மட்டுமே தெரியும். இன்னும் நான் அதை தயாரிப்பாளருக்கு கூட சொல்லவில்லை. 
 
ஒரு படத்தின் வசூல் இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என்பது அனைத்துமே பொய்யான தகவல்கள். ஒரு பப்ளிசிட்டிக்காக கூறப்படும் பொய், இது சினிமாவில் சகஜம்' என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்