தம்பி விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை; தமிழிசை அந்தர்பல்டி

சனி, 28 அக்டோபர் 2017 (18:47 IST)
தம்பி விஜய்க்கு எதிராக நான் கருத்து கூறவில்லை, படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம் என்று தமிழிசை கூறியுள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றது குறித்து பாஜகவினர் மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாஜக மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் விஜய்யை கட்டுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சென்னையின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
 
மெர்சல் படம் விவகாரத்தில் தம்பி விஜய்க்கு எதிராக நான் கருத்து கூறவில்லை. படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்