XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், பில்லா புகழ் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி(அதர்வாவின் தம்பி), அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.
இந்த படம் மூலம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தமிழில் படம் இயக்குகிறார். தலைப்பை பார்க்கும் விஷ்ணுவர்தன் இயக்கிய சர்வம் போல இதுவொரு ஃபீல்குட் காதல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்தை ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே தேதியில்தான் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.