பாதியில் நின்ற வணங்கான் ஷூட்டிங்… இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:12 IST)
பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் வணங்கான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை சில ஆண்டுகளுக்கு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் திருவண்ணாமலையில் நடந்த போது இயக்குனர் பாலாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இப்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்