விபத்தில் சிக்கியது கணவர் எனத் தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - கடைசியில் நடந்த சோகம்

திங்கள், 24 செப்டம்பர் 2018 (07:21 IST)
ஓமலூரில் ஓர் விபத்தில் சிக்கியது தன் கணவர் எனத் தெரியாமல் செவிலியர் அவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சீனிவாசன்(51). இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சிவகாமி. இவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹேமவாணி (14) என்ற மகள் இருக்கிறார்.
 
இந்நிலையில் சீனிவாசன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஒரு விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்து ஓமலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அங்கு மருத்துவர் மற்றும் செவிலியர் குழு அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தது. அந்த செவிலியர்களில் சிவகாமியும் ஒன்று. அடிப்பட்டது தன் கணவர் தான் என தெரியாத சிவகாமி, உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அவரது கையில் தி.மு.க. சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை பார்த்து சிவகாமி, தன் கணவர் தானோ என திடுக்கிட்டார். பின் அவரது முகத்தில் இருந்த துணியை விலக்கிப் பார்த்ததில், பேரதிர்ச்சிக்கு ஆளானார். அவரை கட்டியணைத்தபடி அழுதார்.
 
சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.கணவர் உடலை கட்டிப்பிடித்து சிவகாமி கதறி அழுதது பலரை சோகத்தில் ஆழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்