சூப்பர்ஸ்டார் படத்தை முதல்நாளில் பார்த்த 45 லட்சம் பேர்

Webdunia
சனி, 15 மே 2021 (18:11 IST)
பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.

இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலை
காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மே 13 ஆம் தெதி ஜீ
5 ஓடிடி தளத்திலும், திரையரங்குகள் திறக்கப்பட்ட இடங்களில் 750 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.

இந்நிலையில் ராதே படம்  இப்படத்தைப் பார்க்க ஜீ பிளஸில் சுமார் ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. முதல் நாளன்று இப்படத்ஹ்டை 42 லட்சம் ஏர் பார்த்துள்ளனர். மேலும், இப்படம் வெளிநாட்டில்; நல்ல வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்