ஒரு வருஷம் காத்திருந்ததுக்கு வச்சு செஞ்ச சல்மான் கான்… ரசிகர்கள் கழுவி ஊற்றும் ராதே!

சனி, 15 மே 2021 (08:32 IST)
சல்மான் கான் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள ராதே திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலை  காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மே 13 ஆம் தெதி ஜீ  5 ஓடிடி தளத்திலும், திரையரங்குகள் திறக்கப்பட்ட இடங்களில் திரையரங்குகளிலும் வெளியானது. இந்நிலையில் ஆர்வமாக படத்தை ரசிகர்கள் ஏமாந்து போயுள்ளனர். கொரியாவில் ஹிட்டடித்த ஆக்‌ஷன் படத்தை வீணாக்கியுள்ளார்கள் என்றும் ஒரு வருடமாக இந்த படத்துக்காக காத்திருந்ததற்கு சல்மான் பாய் வச்சு செஞ்சு விட்டார் என்றும் ரசிகர்கள் படத்தைக் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்