சல்மான் கானின் ராதே பட டிரைலர் ரிலீஸ்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:07 IST)
சல்மான் கான் நடித்துள்ள ராதே படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதை மறுத்துள்ள சல்மான் கான் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மே  13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான் ‘இந்த ஈகை திருநாளுக்கு ராதே திரைப்படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஊரடங்கு தொடர்ந்தால் அடுத்த ரம்ஜான் பண்டிகை யன்று தான் ரிலீஸாகும்’ எனக் கூறி இருந்தார். ஆனால் இப்போது ராதே திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று ஓடிடி மற்றும் திரையரங்கு என இரண்டு தளங்களிலும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்