கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் இறுதி போட்டிக்கு டெல்லி அணி தகுதி பெற்றிருந்தது.
நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடின.
இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் மாத்யூஸ் ற்றும் பிரண்ட் ஆகிய இருவரும் ஆவேசமாக விளையாடி தலா 77 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து, 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மார்ச் 15 ஆம் தேதி, அதாவது நாளை நடைபெற உள்ளது. நாளைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.