2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

Mahendran

வியாழன், 13 மார்ச் 2025 (10:04 IST)
கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஐபிஎல் போட்டிகள் எப்போதும் தனிப்பட்ட இடத்தை பெற்றுள்ளன. இதன் தாக்கம் விளம்பர வருவாயிலும் வெளிப்படுகிறது, வருடத்துக்கு வருடம் ஐபிஎல் போட்டியால் கிடைக்கும் வருமானத்தில் மிகப்பெரிய அளவில்  வளர்ச்சி காணப்படுகிறது.
 
அதன் அடிப்படையில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம், டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களின் வாயிலாக ரூ.6,000 கோடி வருவாயை சம்பாதிக்கும் என தொழில்நுட்ப மற்றும் விளம்பரத் துறையாளர் கணிக்கின்றனர்.
 
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகள் மூலம் ரூ.3,900 கோடி வருவாயை பெற்ற நிலையில், இந்த ஆண்டில் தொடரின் வரவேற்பு அதிகரிப்பதால், விளம்பர வருவாயில் 58% வளர்ச்சி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், இம்முறை வருவாயில் 55% டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் கிடைக்கும் எனவும், 45% வருவாய் தொலைக்காட்சியின் மூலமாக வரும் எனவும் கணிக்கப்படுகிறது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி-20 தொடரின் இறுதிப் போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்