மகளிர் ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.
பரபரப்பாக நடந்து வந்த மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளில் நேற்றைய இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே எடுத்திருந்தது.
இந்நிலையில் 150ஐ இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணியை பந்துவீச்சில் கட்டுப்படுத்தியது மும்பை அணி. மும்பை அணியின் அசுர பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
இந்த போட்டியில் 44 பந்துகளில் 66 ரன்கள் அடித்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ப்ளேயர் ஆப் தி மேட்ச் வழங்கப்பட்டது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நட் சிவர் ப்ரண்ட்க்கு இந்த தொடரின் இந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது,
மேலும் தொடரில் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு தொப்பி நாட் சிவாருக்கும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான பர்ப்பிள் தொப்பி அமெலியா கெரும்க்கும் அளிக்கப்பட்டுள்ளது. கோப்பையுடன் 5 விதமான விருதுகளையும் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி.
Edit by Prasanth.K