இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கம்; கலகலக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (12:18 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில் முதலாவதாக பளு தூக்குதலில் இந்தியாவிற்கு வெள்ளிபதக்கம் கிடைத்துள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இரண்டாம் இடத்தை அடைந்து வெள்ளி பதக்கத்தை தட்டியுள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடங்கி முதல் நாளே இந்தியா வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்