பேட்டிங்கிலும் அசத்திய தமிழக வீரர்: டிராவை நெருங்கும் போட்டி!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:19 IST)
பேட்டிங்கிலும் அசத்திய தமிழக வீரர்: டிராவை நெருங்கும் போட்டி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார் என்பது தெரிந்ததே 
 
அவர் ஏற்கனவே சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள நிலையில் தற்போது பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி இதுவரை 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது. ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தற்போது அசத்தலாக விளையாடி வருகின்றனர் என்பதும் இருவருமே அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக கேப்டன் ரகானே 37 ரன்களிலும் மயங்க் அகர்வால் 38 ரன்களும் ரோகித் சர்மா 44 ரன்னிலும் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் அசத்தி வருவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று போட்டியின் மூன்றாவது நாள் என்பதும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையாததால் இந்த போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்