44 நாட்களில் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது! – நடராஜன் குறித்து ஜடேஜா புகழாரம்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (09:24 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நடராஜன் கலந்து கொண்டு விக்கெட் வீழ்த்திய நிலையில் அவர் குறித்து ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் கடைசி டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜன் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா “தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை 44 நாட்களில் மாறிவிட்டது. இந்திய அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட நடராஜன் தற்போது இந்திய அணியின் அடையாளமாக மாறிவிட்டார்” என புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்