4 விக்கெட் இழந்து 200 ரன்களுக்கும் மேல் பின் தங்கியுள்ள இந்திய அணி!

ஞாயிறு, 17 ஜனவரி 2021 (07:49 IST)
4 விக்கெட் இழந்து 200 ரன்களுக்கும் மேல் பின் தங்கியுள்ள இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட 208 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின்னர் முதல்  இன்னிங்சை விளையாட தொடங்கிய இந்திய அணி நேற்று 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இருந்த நிலையில் இன்று கூடுதலாக 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் மயங்க் அகர்வால் 37 ரன்களும் ரிஷப் பண்ட் 4 ரன்களும் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டி தொடங்கிய மூன்றாவது நாளாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியாததால் இந்த போட்டியில் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்