இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை; 10 ஆண்டுக்கு பின் கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (07:47 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இன்று தொடங்க இருப்பதை அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதில் அதிக புள்ளிகள் எடுத்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. 
 
இந்த நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 
 
கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை என்ற மோசமான சாதனையை இந்த போட்டியில் ரோகித் சர்மா முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்