ஆஸ்திரேலியா ப்ரெஷ்ஷா இருக்கு.. இந்தியா டயர்ட் ஆயிட்டு! – ரிக்கி பாண்டிங் கருத்து!

செவ்வாய், 6 ஜூன் 2023 (09:54 IST)
நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாளை ஜூன் 7 தொடங்குகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் “கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டுகளில் விளையாடவில்லை. ஆனால் அதே சமயம் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட பரபரப்பு நிறைந்த ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்கள்.

ஒரு அணி செம ப்ரெஷ்ஷாக விளையாட வருகிறது. மற்றொரு அணி நிறைய விளையாடி சோர்வாக உள்ளது. இந்த காரணிகள் போட்டியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொண்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 44 போட்டிகளிலும், இந்தியா 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்