கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

vinoth

புதன், 9 ஏப்ரல் 2025 (08:18 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி இலக்கை துரத்திய போது 19 ஆவது ஓவரில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார். அவரால் நேற்று பந்துகளை அதிரடியாக ஆடி பவுண்டரிகள் ஆடமுடியவில்லை என்பதால் அந்த முடிவை எடுத்துள்ளனர். இதே போல சில போட்டிகளுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படி வீரர்களை வெளியேற்றுவது கிரிக்கெட்டுக்கு அழகல்ல என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்