இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென்று பழுதடைந்ததாக கூறப்படும் நிலையில், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்திய விமானம் திருப்பி விடப்பட்டு, அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷியாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.