சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

vinoth

புதன், 9 ஏப்ரல் 2025 (08:26 IST)
இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது. கடைசி வரை போராடிய சி எஸ் கே அணி வெற்றி பெறும் வாய்ப்பிருந்தும், கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணி பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி வெற்றியைத் தட்டிப் பறித்தனர். இந்த போட்டியில் பஞ்சாப் அணி பவுலர் சஹாலுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார் கேப்டன் ஸ்ரேயாஸ்.

இது குறித்து போட்டி முடிந்த பின்னர் அவர் பதிலளித்துள்ளார். அதில் ‘சஹால் புத்திசாலித்தனமான பவுலர். ஆனால் டெவன் கான்வே மற்றும் ஷிவம் துபே ஆகியோர் களத்தில் தங்கிவிட்டனர். அதனால் அந்த நேரத்தில் சஹால் பந்துவீசினால் அது அவர்கள் அதிரடியாக ஆடக் காரணமாக இருக்கும் என்பதால் அவரைத் தாமதமாக பயன்படுத்தினோம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்