முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:02 IST)
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் 307 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 47.1 ஒரு ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
நியூசிலாந்து அணியின் டாம் லாதம் மிக அபாரமாக விளையாடி 145 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கேப்டன் வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்