இந்தியாவிலிருந்து வெளியேறும் ‘அமேசான்’ நிறுவன பிரிவு? அதிர்ச்சி அறிவிப்பு!

வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:21 IST)
பிரபல அமேசான் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய அமேசான் அகாடமி மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஆன்லைன் ஷாப்பிங் செயலி அமேசான். அமேசான் ரொபாட்டிக்ஸ், ஏஐ தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு என பல துறைகளில் கால் பதித்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் அகாடமி என்ற ஆன்லைன் கல்வி தளத்தையும் அமேசான் நடத்தி வருகிறது.

சில ஆண்டுகள் முன்னதாக இந்தியாவிலும் அமேசான் அகாடமி அறிமுகப்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பார்த்த வகையில் அமேசான் அகாடமி மாணவர் சேர்க்கை மற்றும் செயல்பாடுகல் இல்லை என தெரிகிறது.

இதனால் இந்தியாவில் அமேசான் அகாடமியை மொத்தமாக மூட அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமேசான் அகாடமி மொத்தமாக இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. இரண்டே ஆண்டுகளில் மூடப்படும் இந்த அகாடமியில் சில மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களை பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்