மதத்துக்கு ஒரு சட்டமா? இனி பொது சிவில் சட்டம்தான்! – அமித்ஷா உறுதி!

வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:56 IST)
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் நடத்தப்படும் என அமித்ஷா கூறியுள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்து மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மையினர் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சில சிறப்பு சட்டங்களும் அமலில் உள்ளது.

இந்நிலையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய பாஜக அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால் இந்த பொதுசிவில் சட்டத்தால் சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாடும் மக்களும் மதசார்பற்றதாக இருக்கும்போது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பொது சிவில் சட்டம் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டு உறுதியாக கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்