ருத்திரதாண்டவம் ஆடிய முன்ரோ; இந்தியாவுக்கு 197 ரன்கள் இலக்கு

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (20:35 IST)
கொலின் முன்ரோவின் அதிரடி ஆட்டத்தால் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. 


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. 
 
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ருத்திரதாண்டவம் ஆடியது. இந்திய பவுலர்கள் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய கொலின் முன்ரோ அதிராடியாக ஆடி சதம் விளாசினார்.
 
முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித மற்றும் தவான் ஆடியது போன்று இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்தில் மற்றும் கொலின் முன்ரோ அதிரடியாக ஆடினர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்