ஸ்மித்தை ஓரங்கட்டிய கோஹ்லி – டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (10:26 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவின் விராட் கோலி ஆஸியின் ஸ்மித்தை விட 5 புள்ளிகள் அதிகம் பெற்று மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஓராண்டுத் தடை செய்யப்பட்ட ஸ்மித் மீண்டும் ஆஷஸ் போட்டிகளில் கலந்து கொண்டு அதிரடியாக விளையாடி தனது முதலிடத்தைத் தக்கவைத்தார்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்ததால் அவர் 928 புள்ளிகள் பெற்றார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரானத் தொடரில் ஜொலிக்காத ஸ்மித் 923 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால் விரைவில் நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்