விராட் கோலியை பார்த்து பயப்படாதீங்க! – வெஸ்ட் இண்டீஸ் கோச் அறிவுரை!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (09:09 IST)
இந்திய கேப்டன் விராட் கோலியை கண்டு பயப்பட வேண்டாம் என வெஸ்ட் இண்டீஸ் கோச் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இதில் முதல் டி20 போட்டி நாளை மாலை தொடங்குகிறது. இதனால் ஏற்கனவே இந்தியா வந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கோச் பில் சிமோன்ஸ் ”இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது. ஆனால் அவரை வீழ்த்துவது மிகவும் கடினம். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோலியை கண்டு பயப்பட கூடாது. இந்திய அணியை அதன் சொந்த நாட்டிலேயே வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

ஆட்டம் தொடங்கும் முன்னரே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோலியை கண்டு பயப்படக்கூடாது என அவர்களது கோச் அறிவுரை வழங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்