சேலத்தில் இன்று சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார் என்பதை பார்த்தோம். இந்த மைதானத்தில் பிற சர்வதேச மைதானங்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கிறது என்பதால் சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் இனிமேல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விரைவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கண்டிப்பாக தோனி இடம் பெறுவார் என்றும் சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும், இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி தொடராக ஐபிஎல் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது
கிரிக்க்ட் போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பு சென்னை மக்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது சேலத்திலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கும் கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் அந்த பகுதியில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்