ஐஎபிஎல் ஏலம் எப்போது: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (20:22 IST)
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான ஏலம் நடைபெறும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான ஏலம் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் பெரும்பாலான அணி உரிமையாளர்கள் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்