ஷிகார் தவானுகுப் பதில் யார் ? – இந்த முன்று பேருக்குதான் வாய்ப்பு !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (14:13 IST)
உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகியுள்ளதை அடுத்து அவருக்குப் பதிலாக யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் சதம் அடித்து தனது பார்மை மீட்டெடுத்தார். அவரது சதம் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த போட்டியில் அவருக்குக் கைவிரலில் காயம் பட்டது. அது தொடர்பான மருத்துவ அறிக்கையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு ஓய்வுத் தேவையெனவும் அறிவித்துள்ளனர்.  இதனால் அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக யார் அழைக்கப்படுவார்கள் என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ள ஸ்டாண்ட்பை அணியில் அம்பாத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரில் யாராவது ஒருவரோ அல்லது இளம் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷாவோ தவானுக்குப் பதில் அழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்