கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:15 IST)
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா மற்றும் விளையாட்டு துறை பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பல விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கால்பந்து ஆட்டத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரேசில் வீரர் நெய்மருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. நெய்மருக்கு கொரோனா இருப்பதை பார்ஸ் செயிண்ட் ஜெர்மைன் கால்பந்து க்ளம் உறுதி செய்துள்ளது. அதை தொடர்ந்து அவரது அணியின் மற்ற வீரர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்