பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் மனைவி மகள்களுக்கும் கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

வியாழன், 3 செப்டம்பர் 2020 (07:20 IST)
முன்னாள் WWE விளையாட்டு வீரரும் ஹாலிவுட் நடிகருமான ராக் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு மட்டுமின்றி அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து மூவரும் மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இதுகுறித்து நடிகர் ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய போது ’எனக்கும் என் மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கஷ்டமான காலம். இருப்பினும் இந்த கடினமான காலத்தை நாங்கள் வென்று விரைவில் கொரோனாவில் மீண்டும் வருவோம் என்று தெரிவித்துள்ளார் 
 
பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் மனைவி மகள்களுக்கும் கொரோனா
நடிகர் ராக் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அறிந்ததும் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ராக் குடும்பத்தினர் விரைவில் குணமாக வேண்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்டுக்களாக பதிவு செய்து வருகின்றனர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்